சுயநலம்
செங்குருதி ஓடையதில்
செந்தாமரை பெண் அவள்
சொக்கி நிற்கும் அழகுமுகம்
காயப்பட்டு வந்தது
புல்மோட்டை
முள்ளி சமரினிலே
முழு குடும்பத்தையும்
முழ்கடித்த எறிகணை வீச்சினிலே
முத்தாக இவள் மட்டும்
இவள் வம்சத்தில் எஞ்சிய ஜீவன்
வலது கையதை
வாங்கியது எறிகணை
துடித்த இதயத்துடன்
வாழத்துடித்தம் மங்கையவள்
தப்பித்து பிழைத்த மங்கை
தரிணியிலேவாழ
வழிகளும் அடைக்கப்பட்டு
விஷமருந்தி இறக்கையிலே
உள்ளம் குமுறுதடி
உன்பால் கொண்ட அன்பினால்
உன் மறைவின் காரணம் - சமுகத்தின்
பிழையோ சுலநல எண்ணமோ
வாழ வழி விடாத இவ்சமுகம்
வலிகொண்டு வாழ்ந்திடும்
வீரிட்டு மேல் எழ -சுயநல
சிந்தனையை ஒளித்திடிடால் மட்டுமே