நீர்நிலை
ஓங்கிவளர்ந்ததோர் காடு அதில் ஒரெ ஒரு குளமெனும் பேரு...
ஓங்கிவளர்ந்ததோர் காடு அதில் ஒரெ ஒரு குளமெனும் பேரு நடுநடுவெ மரங்கள் அதில் பாடுபடும் விலங்கினம் பாட்டுப்பாடும் பறவைகள் தினம் ஒரு நாள் வந்தது சினம் பறவைகள் ஒரு புரம் விலங்கினம் மருபுரம் குளநீருக்கோசரம் கலவரம் பாசரைகள் பலவிதம் நால்வகை அஸ்திரம் மூண்டது பகை தாண்டவம் பூனைகள் புரண்டன யானைகள் நடந்தன புலிகள் உருமின எலிகள் பிரண்டின
ஒருபுரம்
காக்கைகள் கொத்தின கொக்குகள் கத்தின கழுகுகள் எத்தின குருவிகள் குத்தின அர்த்த ராத்திரிவரை அட்டகாசம் முத்திய சண்டை பட்டப்பகல்வரை இருவரும் ஜெயிக்கவில்லை சொட்ட சொட்ட ரத்தக்கரை நியமித்தன இரு நீதிபதிகளை நயமாகபேசும் மரங்கொத்தி புயலாகப்பெசும் கரடி கத்தி கரடி வாதாட நீர் நிலை விலங்கினத்திர்க்கென்று மரங்கொத்தி சேர்த்தது பற்வை இனத்திற்க்கு மூண்டது பகை தீர்மானமெ இல்லை நொண்டிக்குருவியை நடுவராக்க சத்தமெ இல்லை குருவி சொன்னது தீர்ந்திடும் தொல்லை தாகம் தவித்தார்க்கெ அந்த நீர்நிலை என்றது அன்றெ தீர்ந்தது நீர் கொண்டுவந்த பகை வாழ்ந்தன பல வருடங்கள் வளமுடன் சேர்ந்தெ உயிரினங்கள் குளத்தைச் சுற்றிச் சுற்றி