குட்டி குட்டி கவிதைகள்

கண்கள் மூடி சாய்ந்து கொண்டேன் கவலை இனி ஏதும் இல்லை
என்னை நீயும் ஏற்றுக்கொண்டாய் இறுதிவரை நீதான் எல்லை
கரங்கள் கோர்த்து நீயும் கவிதை சொல்ல -மனதில்
பூக்கும் மலர்கள் நூறு ...
பக்கத்தில் நீயும் பரிவோடு சாய்ந்தாய் -வெட்கத்தில்
பூத்தேன் அடிவானாய் நானே ..
காதல் பாசை நீயும் பேச -மோதலில்
நிற்கிறதே விழிகள் நான்கும்
சிக்கனத்தை கடைபிடிக்க நானும்
சேர்ந்து கொண்டேன் உன் இதயத்திலே
குட்டி குட்டி கவிதைகள் கொட்டி தீர்க்கிறேன் உன்னாலே
எட்டி நீயும் சென்று விட்டால் உயிரே பிரிந்துவிடும் தன்னாலே