இயற்கை

தென்னைமரத் தோட்டமெனும் வெல்வெட் போர்வையிலெ சுற்றிக்கொண்ட செலையிலெ நாணம் கொள்ளும் நாட்டுப்பெண்ணெ உன்னை வெற்றிகொள்ளத்தோணுதம்மா என் மனக்கண்ணுக்குள்ளெ நடுநடுவெ நந்தன்வனம் இதழ்திரந்த செங்கமலம் மடைதிரந்த நீரின் வளம் இடைநடுவெ ஓடுகின்ற நிலமகளெ தானிய குவியலன்ன மலைகளம்மா இடையிடையெ விலையில்லா முத்தம்மா நீ சத்தியமெ இச்சைகொள்ளும் ஆடவரை பிச்சை கேட்க வைத்திடுவை வித்தகியெ நெற்றியிலெ குங்குமமாய் வட்டநிலா உன்னை இன்று சுற்றிவரும் சூரியன் கற்பூரத் தீப்பிழம்பாய் என்றும் முற்றுகையாம் நீலவானவனின் வாள்படையால்

எழுதியவர் : நாடார் (25-Jun-14, 10:16 am)
சேர்த்தது : பிரியா
பார்வை : 171

மேலே