நீ வாழ்வாய்...

காற்றலையில் தானே எந்தன் உறவானாய்
உனக்கும் எனக்கும் உருவம் உண்டென்றால்
அது நம் இருவரின் செல்போன்கள் தானே .....

நினைவுகளை சுமந்து வாழ நம்
நிஜங்களை தீண்டியதே இல்லையே
நாம் .......ஆனாலும் நம் உரையாடல்
உயிருக்குள் நிறைந்திருக்கு .......

தூரங்களால் நாம் விலகி இருக்கலாம்
துயரங்கள் நம்மை வதைக்கலாம்
பிரிவு மரணம் வரை தொடரலாம்
நாம் இருவரும் நமக்குள் தொலைந்தே
வாழ்ந்து விடலாம் ..........

உன்னோடு நான் வாழாத போதும்
உன் உள்ளத்துக்குள் நான் வாழ்ந்தால்
போதும் ....எந்தன் கவிதைக்குள்
எப்போதும் நீ வாழ்வாய்........

எழுதியவர் : v.m.j.gowsi (11-Mar-11, 3:46 pm)
சேர்த்தது : m.j.gowsi
பார்வை : 620

மேலே