அறைக்குத் திரும்புதல்

நான்
நிறுத்தத்தில்
நின்றிருந்தேன்

பக்கத்திலொருவன்
பாக்கு மென்று
" பொழிச் " என்றான்

ஒரு குடிகாரன்
அருகே வந்து
" உவ்வே " என்றான்

வரட்டு வரட்டென்று
ஒரு கடைக்காரன்
சாலையைக்
கூட்டி வாரினான்

தன்னைச்
சவுக்காலடித்தபடி
இரண்டு சிறுவர்கள்
காசு கேட்டு
நொய் நொய்
என்றார்கள்

இன்னொருவன்
அலைபேசியில்
சிலபல
கெட்டவார்த்தைகளை
யாருக்கோ
விநியோகித்துக் கொண்டிருந்தான்

எவனோ பேமானி
அருகே வந்து
அடிக்கடி
திரும்பிப் பார்த்தான்

நான்
மயிரே போச்சென்று
அறைக்கு வந்து
மல்லாந்து படுத்து
விட்டத்தைப் பார்த்தேன்
" நீயொரு கோழை "
என்றது விட்டம்
நான்
" ஆமாம் அதுக்கென்ன "
என்றேன்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணதே (25-Jun-14, 7:46 pm)
பார்வை : 52

மேலே