நெறிப்பட் டவர் பயிற்றார் - ஆசாரக் கோவை 53

தெறியொடு கல்லேறு வீளை விளியே
விகிர்தங் கதங்கரத்தல் கைபுடை தோன்ற
உறுப்புச் செகுத்தலோ டின்னவை யெல்லாம்
பயிற்றார் நெறிப்பட் டவர். 53 ஆசாரக் கோவை

பொருளுரை:

ஒழுக்கமுடையவர்கள் பொருட்களை விசிறியெறிவது, கல் எறிவது,
கனைப்பது முதலியன செய்தல், சப்தமாக அழைத்தல், ஒருவன் செய்
வது போலத் தாமும் அவனை இகழ்ந்து செய்தல், கோபம் கொள்தல்,
ஒளித்தல், கைதட்டி அழைத்தல் போன்ற பிறர்க்கு வெளிப்படும்படி
தன் உறுப்புக்களைக் காட்டிடும் செயல்களை எல்லாம் தெரிந்து
செய்யமாட்டார்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jun-14, 10:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

சிறந்த கட்டுரைகள்

மேலே