அவளின் நினைவுகள்

அவள் எங்கே எங்கே என்று
எந்தன் உள்ளம் அலை பாயும்
விழிகள் ஏனோ திக்கு தெரியாத காட்டில்
வழி தேடி முழிக்கும்
பார்க்கின்ற நொடி பொழுதில்
மௌனம் மட்டும் பேசிக்கொள்ளும்
விட்டு பிரிகின்ற நொடிகளில்
கண்களின் மௌனம்
கண்ணீர் துளிகளில் மறைந்து போகும்
கால்கள் அவள் போகின்ற
பாதைகளில் எல்லாம்
தடம் பற்றி நடக்கும்
பார்க்கின்ற இடங்கள் அவளோடு
பழகிய நாள்களை
நெஞ்சில் பதிக்கும்
சாகின்ற வரையிலும் அவள் நினைவுகள் மட்டும்
நெஞ்சை கொல்லும் !!