அறிந்ததும் அறிவதும்

..."" அறிந்ததும் அறிவதும் ""...

பிறப்பின் அர்த்தம்
இம்மையா?? மறுமையா??
அறிவின் துடக்கம்
அன்னையா?? ஆசானா??
அன்பின் ஆளுமை
உறவா?? நட்பா??
உறவின் உண்மைநிலை
பணமா?? பாசமா??
கல்வியின் அவசியம்
அறிவா?? தேவையா??
கவிதையின் பிறப்பு
காதலா?? காயமா??
காதல்(லில்) அழிவது
பொறாமையா?? பிடிவாதமா??
திருமணத்தின் பந்தம்
சிறையா?? மகுடமா??
கண்ணீரின் வரவு
மரணமா?? மகிழ்ச்சியா??
போர்வைக்குள் போராட்டம்
கலவியா?? காமமா??
வியர்வையின் வீரியம்
வெப்பமா?? உழைப்பா??
சோர்வினை தருவது
கலைப்பா?? கவலையா??
வேதனை தருவது
வலியா?? வார்த்தையா??
கலாச்சார சீரழிவு
அழிவா?? முடிவா??
உடைகளின் மாற்றம்
அழகா?? ஆபாசமா?
உலகத்தின் வாழ்வு
பொய்யா?? மெய்யா??

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (26-Jun-14, 11:36 am)
பார்வை : 114

மேலே