இனவெறி எதிர்ப்போம்

பிண(ம்)ங்கள்! பிண(ம்)ங்கள்!
எங்கு நோக்கினும் நடமாடும் மனித பிண(ம்)ங்கள்!!

ரண(ம்)ங்கள்! ரண(ம்)ங்கள்!
குருதி படிந்த ஆறா ரண(ம்)ங்கள்!!

சன(ம்)ங்கள்! சன(ம்)ங்கள்!
ஓர வஞ்சனையால் நொந்திடும் சன(ம்)ங்கள்!!

மன(ம்)ங்கள்! மனங்கள்!
இரக்கம் அற்ற கொடூர மன(ம்)ங்கள்!!

குண(ம்)ங்கள்! குண(ம்)ங்கள்!
காழ்புணர்வை விதைக்கும் கலவர குண(ம்)ங்கள்!!

இன(ம்)ங்கள்! இன(ம்)ங்கள்!
பிரிவின் பெயரில் எந்தனை இன(ம்)ங்கள்!!

விதையுங்கள்! விதையுங்கள்!
நல்லுறவுக்கு வித்திடும் ஒற்றுமையை விதையுங்கள்!!

புடையுங்கள்! புடையுங்கள்!
காலம்வரும் காத்திருந்து நைய புடையுங்கள்!!

எழுதியவர் : -ச.அப்துல் பாஸித் (26-Jun-14, 1:53 pm)
சேர்த்தது : Abdul Baseed Sarbudeen
பார்வை : 322

சிறந்த கவிதைகள்

மேலே