ஏழையின் புன்னகை

உயிர்களெல்லாம் உலகில் பிறந்திருந்தாலும்
நீயே வாழ பிறந்தவன்

எத்தனை துயர் கண்டாலும்
இதழ் புன்னகையால் மறைத்திடுவாய்

சொப்பனங்கள் பல கண்டாலும்
உறங்காமல் உழைக்கின்றாய்

வகைவகையாய் உண்ணடதில்லை
வயிறும் எப்போதும் நிறைந்ததுமிலை

கண்களை கண்ணீர் மறைத்தாலும்
மனதின் உரமோ குறைந்ததில்லை

வாழ்க்கையின் வழியில் செல்கின்றாய்
வலிகள் தந்தாலும் சிரிக்கின்றாய்

விதியின் எழுத்து ஒன்றானாலும்
அதை மாற்ற நீயும் முயல்கின்றாய்

உன் வாழ்க்கையின் வெற்றிடத்தை நிரப்ப
நீ காகிதங்களை சேகரிக்கின்றாய்

உன்மேல் அன்பை பொழிய யாருமில்லை என
ஏங்கிட உனக்கோ நேரமில்லை

செல்லுமிடமெல்லாம் சொந்தமில்லை
உனை சேர்த்துக்கொள்ள இங்கெவர்க்கும்
மனதில் அன்புமில்லை

எழுதியவர் : நிஷா (26-Jun-14, 1:56 pm)
Tanglish : yezhaiyin punnakai
பார்வை : 524

மேலே