தண்ணீன் தண்ணீர் தண்ணீர்

..."" தண்ணீன் தண்ணீர் தண்ணீர் ""..

மூன்றாம் உலகப்போர் வரவும்
தண்ணீரே காரணியாய் இரும்

தானாய் வந்த தண்ணீர்
காணாது போனதென்ன
மண்ணை பத்தடிதோண்ட
பீறிட்டே வந்த தண்ணீர்
ஆழ்துளை குழலமைத்தும்
அகப்படாமல் போனதெங்கே
முங்கி குளித்ததொரு காலம்
குடுவையில் மொண்டுவைத்து
தேகம் துடைப்பதே இக்காலம்
மனிதன் வனங்களை அழித்தே
பூமி வளங்களை குறைக்கிறான்
வனம் அழிய வான்மழை பொய்க
தரணியில் தண்ணீ ர் தட்டுப்பாடு
உலக அமைதிகள் நிலைகுலையா
வீண் விரயத்தை தவிர்த்திடுவோம்
விதைத்து மரம் வளர்த்திடுவோம்,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (26-Jun-14, 6:53 pm)
பார்வை : 144

மேலே