நிழலாய் உன் பின்னால் --- அரவிந்த் C

சிரித்துக் கொண்டே
அழுகின்றேன்..
பேசிக் கொண்டே
மௌனமாய் நிற்கின்றேன்..!

கூட்டத்தில் நின்று கொண்டே
தனிமையை உணர்கின்றேன்..
கண்ணீரிலும்
ஆறுதல் தான் தேடுகின்றேன்..!

கண்மூடி ஒரு கனம்
யோசித்தேன்..
அக்கனப்போழுதை
வார்த்தையாய் வரைகின்றேன்..!

புரியாமல் அறியாமல்
பேசி சென்றாய்,
வலிக்கவில்லை என்று
பொய் சொல்லி ஒதுங்கி நின்றேன்..!

உன்னை மறக்க நினைத்து
என் மனதை தயார் செய்தேன்..
என் மனதோ
என்னை வெறுக்க முடிவு செய்தது...!

புரிந்து கொள்ளாமல்,
பல நீ பேசினாலும்..
புரிந்து கொண்டு
பொறுமையாய் காத்திருக்க சொன்னது என் மனம்..!

வலி தரும்
வார்த்தைகள் பேசி செல்கிறாய்..
வலித்தாலும் மறைத்துக் கொண்டு
வலம் வருகிறேன் நிழலாய் உன் பின்னால்...!

எழுதியவர் : அரவிந்த் .C (27-Jun-14, 2:37 pm)
பார்வை : 148

மேலே