நான்
myself as a paddy harvested by my father
செம்மண்ணிலே உழுது பொன்னிறமாய் விழைந்த சம்பநேல்லாம் நான்
அம்மானைஆடிவந்து ஆவணியில்பூமுடித்த பெண்னானம்மா
தென்பாங்கில் பன்னிரெண்டு இன்னிசைகள் பாடிவந்த கண்ணாட்டியாம்
அன்புதண்ணீரில் தான்வளர்ந்து உல்லாசமாய் விரிந்த செந்தாமரையாம்
நால்புறமும் பாலங்கட்டி நடுஅமைந்த நந்தவனம் என்வீடம்மா
நலுங்குவைத்து என்மாமன் நாண்பூட்டி கொண்டுவந்த பெண்னானம்மா
அலுங்கிவரும் அல்லிமலர் குலுங்கிவரும் குண்டுமல்லி என்ஜாதியாம்
ஆற்றோரம் அருவியோரம் அலைஅடித்துதள்ளி வந்த தேன்பாகம்மா
மாத்துத்தங்கம் பாத்தேடுத்து நல்முத்துகோத்தெடுத்த போன்னாரமாம்
வேர்த்தனெற்றிவிருவிருக்க ஆற்றோரம் பாடுபடும் விவசாயி பெண்னானம்மா