விதியின் விளையாட்டு38
ரிஷானியின் அப்பா மனோஜிடம் அவளை அழைத்து விட்டு வீட்டிற்கு வரும் படி சொன்னதால் அவளை அழைக்க சென்றவன் அங்கு ரிஷானி ஏதோ மனக்குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தான் என்னவென்று கேட்கவா? என்று மனதில் நினைத்தவனை உள்மனது வேண்டாமென்று தடுத்தது..........
பக்கத்தில் சென்று ரிஷானி என்று அழைத்ததும் அதே பழைய புன்னகையுடன் என்ன அத்தான் என்று கேட்டாள்.
ஒருநிமிடம் அந்த புன்னகையில் நிலைகுலைந்தவன் அதை வெளிக்காட்டாமல்,,,,,,,
உன் அப்பா, அம்மா என் வீட்டில்தான் இருக்கிறார்களாம் உன்னையும் என்னுடன் அழைத்து வர சொன்னார்கள் என்று சொன்னான்.
சரி அத்தான்! நீங்கள் செல்லுங்கள் நான் இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு தன் புத்தகங்களை எடுத்து வைத்து மதனைநினைத்து மனதில் ஆயிரம் எண்ணங்களுடன் அன்னநடை போட்டாள் ரிஷானி...!
ரிஷானிக்காக வெளியில் பைக்கில் காத்திருந்த மனோஜ் அவள் வந்து அமர்ந்ததும் வீட்டிற்கு புறப்பட்டான்.
இவர்கள் வருகையை எதிர்பார்த்திருந்த பெற்றோர் அவர்கள் ஜோடியுடன் வருவதைப்பார்த்ததும் வைத்த கண் வாங்காமல் ரசித்துக்கொண்டிருந்தனர்.
உள்ளே சென்றதும் இருவருக்கும் சாப்பாடு கொடுத்துவிட்டு சொல்ல வேண்டிய விஷயத்தை பேச ஆயத்தமானார்கள்????
மனோஜிடம் நான் பேசுறேன் என்று சொல்லிய ரிஷானியின் அப்பா மனோஜ் பக்கம் திரும்பினார் மனோஜ் நாங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்திருக்கிறோம்.
உன் முடிவுக்காக தான் காத்திருக்கிறோம் என்று சொல்ல..?? என்ன மாமா சொல்லுங்கள் என்றான்......
ரிஷானிக்கும் உங்களுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளோம் அடுத்த முகூர்த்தத்தில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாமா?என்று சிறிது தாழ்ந்த குரலில் கேட்டார்......?
அவரை கோவத்துடன் பார்த்தவன் பொறுமை அடைந்து..... வேண்டாம் மாமா, எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என்று வெறுத்துக்கூறிவிட்டு அங்கிருந்து நகர முயன்றான் அவனை யாரும் விடுவதாக இல்லை ஏன் மனோஜ் ரிஷானியை பிடிக்கவில்லையா?என்று தாய் கேட்க!
அப்படி ஒன்றுமில்லை எனக்கு இனி ஒரு திருமணம் தேவையில்லை என்று திட்டவட்டமாக கூறினான்.
அனைத்தும் பார்த்துக்கொண்டிருந்த ரிஷானி எதுவும் பேசாமல் மௌனமாக நின்றாள் என்ன நடக்குமோ?நடக்கட்டும் எல்லாம் விதிப்படி அமையட்டும் என்று மனதிற்குள் நினைத்தவளுக்கு கண்களில் கண்ணீர் பெருகியது.........
இதை பார்த்த மனோஜின் பெற்றோர் என்னப்பா இப்படி பேசுறா அங்க பாரு ரிஷானி அழுகிறாள் உன்னை அவளுக்கு ரொம்ப புடிக்கும்டா, அவளை கட்டிக்க என்று கெஞ்சினார்கள்...!
உனக்கு சம்மதம்தானே ரிஷானி என்று கேட்க பதில் பேசாமல் குனிந்துகொண்டாள் ரிஷானி அவளின் மௌனம் சம்மதம் என்று அனைவரும் முடிவெடுக்க மனோஜின் பதிலை எதிர்நோக்கினர்.....
அவன் முடியாது என்றதும் மனோஜின் அம்மா கோவப்பட்டு..........
என்னதான் இருந்தாலும் ரிஷானி ஷிவானியை விட ஒரு படி மேல்தான்பா நீ இவளை தானே முதலில் மனதார காதலித்தாய் நாங்கள் தான் முதல் பெண்ணை திருமணம் செய்து வைத்தோம் என்று குட்டை உடைத்தாள்.....
ரிஷானி உட்பட அனைவருமே இதைக்கேட்டதும் மௌனமானார்கள்....!
ரிஷானிக்கு இந்த நொடி மனோஜ் மேல் பாசம் உயர்ந்தது நம் மேல் ஆசை இருந்தும் நல்ல நாகரிகமாக நடந்து கொண்டாரே....???
"அத்தான் மிகவும் நல்லவர்,
நமக்கு பிடித்தவரை காதலித்து
திருமணம் செய்வதைவிட
நம்மை விரும்பியவரை திருமணம்
செய்வதே மேல்"
என்றவள் இந்த திருமணம் தான் சிறந்தது......!
நான் நேசித்து தேடிய ஜீவன் எனக்கு கிடைக்கவில்லையென்றாலும் முதன்முதலில் ஒருநாளாவது என்னை உண்மையாய் நேசித்த ஜீவன் என்வாழ்க்கையில் வருவதே சிறப்பு என்றவள் தன் தாயிடம் தனது சம்மதத்தை கண் ஜாடையில் தெரிவித்தாள்..........
அனைவரும் மனோஜின் பதிலை எதிர்பார்த்து நின்று கொண்டிருக்க ஜோசியர் அங்கு வந்தார்....
என்னப்பா!மனோஜ் திருமணம் கசக்கிறதா? நீ இவளை திருமணம் செய்து கொண்டால் இருவரின் வாழ்க்கையும் சிறப்பாய் அமையும் அந்த இரண்டு பெண்பிள்ளைகளின் ஜாதகத்தைக்கணித்தவனும் நான்தான் அவர்கள் வாழ்க்கையை கணிப்பதும் நான்தான் நிச்சயம் ரிஷானிக்கு நல்ல வாழ்வு கிடைக்கவேண்டும் என்றால் உடனே அடுத்த முகூர்த்தத்தில் திருமணத்தை நடத்தத் ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார்ஜோசியர்....!
அனைவரும் மனோஜை நோக்க......
மறுபடியும் சாமியார் பேச ஆரம்பித்தார்?????
முதலில் அந்த திருமணத்தை நடத்தாதீர்கள் என்று படித்து படித்து சொன்னேன் கேட்காமல் செய்தீர்கள்,
இப்பொழுது இந்த திருமணத்தை நடத்துங்கள் என்று சொல்கிறேன் இதையாவது ஒழுங்காக செய்யுங்கள் நன்றாக இருப்பீகள் இது வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல எச்சரிக்கையுடன் சொல்கிறேன் கேட்டால் சரி என்று கூறி விட்டு சென்றார்..........
விதி தொடரும்.......