முருகா முருகா

செந்தூரக்குமரா நீ எந்தன் நாவினிலே வந்தாட வேண்டும் கந்தா நீயே எந்தன் சொந்தம் நீயே எந்தன் பந்தம் அல்லாடும் உலகினிலே அசையா பேரின்பம் உந்தி உந்தி வந்தேன் உன் தங்கப்பாதம் நன்றியுடந்தந்தேன் அன்பே என் கீதம் தொந்திக்காரன் உன் அண்ணன் முந்திக்கொண்டான் பழம் தின்றுக் கொண்டான் எந்திரிக்காமல் குந்திருக்கும் யானை முக வண்ணன் சித்தம் நித்தம் நினைந்து பக்தி பலம் கொண்டு எத்திக்கும் உன் புகழ் பாடும் சக்திவேல்கொண்டு முக்தி வழிகண்டு கற்கும் விதிதந்து சொற்கள் விடைதேட உத்தரவு வேண்டும் வற்புத்தி உன்னை வதைக்கின்றேன் அற்புதங்கள் செய்திடுவாய் நீ குற்றுயிராய் வாழும் மக்கள் குறைகளையே தீர்க்க கற்றுத்தருவாய் நீ பொற்ப்பாதம் பணிந்தேன் நற்றமிழில் பயின்றேன் குற்றம் குறை தீர்த்தருள்வாய் நீ வெற்றி வேல் இன்று பக்கபலமாக உத்தரவு வேண்டும் புத்திகூர்மையும் மனசக்தி மாரினிலே வேண்டும் சக்தி சக்தி இனி சக்தி சக்தியே எட்டுத்திக்கும் வேண்டும் பக்தி வழியாகி முக்தி வழிகாண மருத மலையானை தொடர்ந்து வழிநடத்தும் உனது படை மீண்டும் வேண்டும் உழுது உழுது நிலம் பொலிவு பெறவே உன் உச்சிமலை விளக்காக வேண்டும் நலிந்த மனிதர்கள் வலிவு பெறவே அழியா உன் புகழ் மீண்டும் வேண்டும் கலிகாலம் முடிவு பெறவே இன்று அருள் கொண்டு தாரும் படிப்படியாய் உனது படியேரும் பக்தர்கள் பலகோடி எண்ணிக்கை வேண்டும் துடி துடிக்கும் தோள்களில் முருகன் காவடி எடுக்கும் வீரம் வேண்டும் துப்பரவாய் நிலம் தூய்மை காண பசும் வயல் வெழிகள் மேலும் வேண்டும் கற்புடைய பெண்களின் கடுந்தவமும் வளமனமும் நிலம் காக்க வேண்டும் விற்ப்போரும் வாள்ப்போரும் வீணே நிகழாமல் நிச்சலன வாத்தாவரணம் தேவு ரோடு முருகனின் பட்டைத்திருனீரு நெற்றிநிறைய வேண்டும் பட்டி தொட்டியிருந்து மக்கள் திரளாக வந்திருக்க வேண்டிம் நித்தம் நித்தம் என் முருகன் புகழ்பாட வற்புருத்தும் மனம் எனக்கு வேண்டும் மஞ்சள் மயமாக கொஞ்சும் குலமாதர் நெஞ்சுரம் இன்னும் வேண்டும் த்ஞ்சம் நீயென்று அஞ்சும் மனமெல்லாம் சிங்கம் போலாக வேண்டும் பஞ்சபூதங்கள் ஒன்று சேர்ந்தெங்கள் குலம் காக்க வேண்டும் ஆரோஹரா என்று கதறும் மாந்தர் உன் திருமுகம் காண வேண்டும் ஆரோகரா முருகா அரோகரா ஆரோகரா முருகா அரோகரா ஆரோகரா முருகா அரோகரா

எழுதியவர் : பிரியா நாடார் (28-Jun-14, 4:34 pm)
சேர்த்தது : பிரியா
Tanglish : MURUGAA MURUGAA
பார்வை : 150

மேலே