ஏற்றமும் தாழ்வும்

ஏற்றமும் தாழ்வும்
ஏற்றமும் தாழ்வும் ஏனிந்த நாட்டிலெ தோற்றுவித்தாய் என் இறைவா மாற்றும் மருந்தை காட்டாது காற்றில்விட்டாய் சட்டமும் தர்மமும் பெற்றிடும் போதிலும் தமிழ் கல்வியை மாதர்கள் கற்றிடும் போதிலும் தாய் அன்பினை புத்திரர் பெற்றிடும் போதிலும் ஏற்றமும் தாள்வும் ஏனிந்த நாட்டிலே தோற்றுவித்தாய் என் இறைவா

மலையும் மடுவும் அலையும் கரையும் விளையும் நிலமும் விளைய மணலும் பாலையும் சோலையும் பஜ்சமும் புயலும் பனியும் வெயிலும் படைத்ததேனோ பிணியும் பசியும் பணமும் வளமும் விஷமும் பாலும் வேண்டுவதுதானா ஏற்றமும் தாழ்வும் ஏனிந்த நாட்டிலே தோற்றுவித்தாய் என் இறைவா மாற்றும் மருந்தை காட்டாது காற்றில்விட்டாய் இறைவா

உறக்க விளிப்பும் உலக அமைப்பும் ஊளின் வினையும் வாழ்வுதனையும் காக்கும் பரம் பொருள் கடவுள் தனையும் ஆக்கும் அறிவு அரும்பொருள் தனையும் அழிவுத்தொழில் செய்யும் அரக்கர் அனைவரும் அமைத்திட்டபோது ஏற்றமும் தாழ்வும் ஏன்படைத்தாய் சாற்றுதல் எனக்கும் தரவேண்டும் இறைவா

வரவும் செலவும் ஏழ்மை பணமும் உறவும் பிரிவும் அற்று ஊரார் அனைவரும் ஒருமித்துவாழ ஏற்றத்தாழ்வு புரமிட்டுஓட மாற்றும் மருந்தை தரவேண்டும் இறைவா கூற்றைக்கூட மாற்றித்தர வல்லமை பெர வேண்டும் இறைவா

ஆதியும் அந்தமும் அசைவும் ஸ்திரமும் அழிவும் பிறப்பும் விழையும் வெறுப்பும் அன்பும் பண்பும் ஆக்கப் பொருளும் ஆழிவின் கருவும் சேர்த்துச் சமைத்து உள்ளும் வெளியும் உரையப்பொற்று சாதித்தளையும் மாற்றும் மருந்தை காட்டும் கடவுளை போற்றும் புலமை பெரும் வரம் தருவாயே

எழுதியவர் : பிரியா nadar (28-Jun-14, 4:31 pm)
சேர்த்தது : பிரியா
பார்வை : 146

மேலே