தமிழ் பண்பாடு

தமிழ்ப்பரம்பரைப் பண்பாடு மஞ்சள் நீராட்டு
எட்டான எட்டுவச்சி ஓ அத்த நா வந்தேனம்மா நீ சித்தாட கட்டக்கண்டு செல்வமெல்லாம் தந்தேனம்மா
நா பட்டபாட்டக் கேக்கவேண்டா ஒத்தக்காலில் நின்னேனம்மா கட்டுப்பட்ட எம்மனசு ஒனனச்சுத்தி வந்ததம்மா
சித்தாட கட்டிக்கிட்டு நீமெத்தனமா இந்துக்கிட்ட அத்தபட்டபாட்ட கேக்கணுமா பட்டபாட்ட கேக்கணுமா?
நா கத்துக்கிட்ட சட்டமெல்லாம் மொத்ததில பேசலியே வட்டம்போட்டுகாட்டவேண்டும் ஊருக்கெல்லாம் சொல்லவேணும் வேண்டும் எந்தம்பி மகளுக்கு மஞ்சநீராட்ட வேண்டும் சொந்தபந்தமெல்லாம் கொங்சமில்ல நஞ்சமில்ல அஞ்சு தலமொர நா ஒண்ணு
சேத்துக்கொண்டுவாரே நீ மஞ்ச நீராடம்மா மஞ்சநீராடம்மா
ஓ பிஞ்சு மனோ கொஞ்சுதடி நா தஞ்சமடி உன்மடியில்
எட்டான எட்டுவச்சி ஓ அத்த நா வந்தேனம்மா நீ சித்தாட கட்டக்கண்டு செல்வமெல்லாம் தந்தேனம்மா
பட்டுப்பாவாட பூப்போட்ட தாவணி ஆட்டூணு சொல்லம்மா வாத்தியோ கொண்டுவாரே தட்டோட வாழப்பழம் முத்துமால செஞ்சிதாரே
எட்டுமேல எட்டுவச்சிசே மெல்ல மெல்ல எட்டுவச்சே நீ ஆட்டுன்ணு சொல்லம்மா நா பூட்டித் தாரே தங்க நக
அஞ்சுவகை பலகாரோ செஞ்சிதாரே நீ மஞ்சளாடு அத்த மடியில நீ கொஞ்சிக் கொஞ்சி விளையாடு கொஞ்சிக் கொஞ்சி விளையாடு
உஞ்சலில நீயிருந்து சாஞ்சி சாஞ்சி ஆடம்மா மாஞ்சி மாஞ்சி போகுதடி தேஞ்சி போன எம்மனசு
தென்னமரத்தோட்டோ ஒம்பேருக்கு செஞ்சிடேனே நீ நின்னு ஆடி விளையாட மந்தத்தோட்டோ தந்துட்டேனே
அக்கோ பக்க மெல்லாம் ஒன்னச்சொல்லும் எஜமானி நீதானே நம்மஊரு சின்னக்குட்டி ராணி சின்னக்குட்டி ராணி ஓசினு நீதானே சான்சி கி ராணி தேசமெல்லாம் ஆட்சிசெய்ய வாங்கிவந்த ஆசி நா வாங்கிவந்த ஆசி நா வாங்கிவந்த ஆசி

எழுதியவர் : பிரியா நாடார் (28-Jun-14, 4:29 pm)
சேர்த்தது : பிரியா
பார்வை : 121

மேலே