எனக்காக காத்திரு

என்னுள் உன்னை உணரும் நாள்
மிக தொலைவில் இருப்பதாய் நினைத்திருந்தேன்;
இன்று உன்னால், என்னுள் என்னையே நான் உணராமல் திகைக்கிறேன்..!!

உன்னை நிலவென்று எட்டி பார்ப்பதா? இல்லை
என் உயிர் என்று தொட்டு பார்ப்பதா? ஏனெனில்..
இதுவரை என் உயிர் என்று நான் சேர்த்து வைத்த உறவுகள் எல்லாம்,
இன்று என்னை உயிரோடு கொன்று விட்டன..! அதனால்
உன்னை நான் நிலவென்று எட்டியே பார்க்கிறேன்..! அப்போது தான்
பௌர்ணமியும், அமாவாசையும் நான் பழகிக் கொள்வேன்..!

என்னை கட்டி போட்டு காவலனாய் நிற்காதே;
என் கட்டவிழ்த்து, வெறும் காதலனாய் என் அருகில் இரு..!
நான் ஜன்னலோரம் வரும் மழைச் சாரல் அல்ல, உனக்கு..
வெறும், ஜன்னலோரம் வரும் தென்றல் காற்று..!!
வெறும் இரவில் தெரியும் நிழல் மட்டுமே நம் உறவு.. அதில்
நிஜங்களை தேட வேண்டாம்...!!

காதலுக்கும், காமத்திற்கும் உள்ள இடைவெளி…..
என்னவென்று எனக்கு தெரியாது.. இருந்தும்
காதலின் எல்லை கடக்க, நாம் இன்னும் காலங்கள் பல கடந்து செல்வோம்..!

இதயத்தின் ஆழத்தில், நம் காதலை உணர்ந்த நாம்,
அந்த காதலின் ஆழத்தை உணரும் வரை காத்திரு..!!
என் உயிர் நீ என,
நான் உன்னை தொட்டுப் பார்க்கும் வரை காத்திரு..!!

எழுதியவர் : சுதா ஆர் (28-Jun-14, 11:48 pm)
சேர்த்தது : சுதா ஆர்
Tanglish : enakkaga kaathiru
பார்வை : 277

மேலே