அவள் ரொம்ப மோசம் Mano Red

ஜன்னல் வழி பார்த்த என்னை
மின்னலாய் தாக்குகிறாள்,
கண்ணிலே மண்ணைத் தூவி
விண்ணில் மறைந்து ஓடுகிறாள்...!!

கடிகார முள்ளில் என்னை
அதிகாரம் செய்கிறாள்,
நொடிநேர பார்வை வீசி
பொடிப் பொடி ஆக்குகிறாள்...!!

அலைபேசி அலையில் என்னை
விலைபேச அழைக்கிறாள்,
மழை போல கொஞ்சி பேசி
கொலை செய்ய துடிக்கிறாள்...!!

மைய்யிட்ட கண்ணால் என்னை
தீயிடப் பார்க்கிறாள்,
மெய்யென அறியும் முன்பே
பொய்யென மாற்றுகிறாள்..!!

வாசனைப் பேச்சால் என்னை
யோசனையில் ஆழ்த்துகிறாள்,
வேதனைகள் தீரும் முன்பே
சோதனைகள் கூட்டுகிறாள்...!!

வெந்நீரில் இலையாய் என்னை
கண்ணீரில் ஆழ்த்துகிறாள்,
மண்ணில் புதையும் நேரம்
தண்ணீரை நீட்டுகிறாள்...!!

படித்த முட்டாள் என்னை
நடித்து மயக்குகிறாள்,
துடித்த எந்தன் நெஞ்சை
வெடிவைத்து அகற்றுகிறாள்...!!

நேசம் பார்த்து வந்த என்னை
வேசம் இட்டு துரத்துகிறாள்,
மோசமான பெண் என்றாலும்
பாசமான பெணணாகிறாள் அவள்.!!

எழுதியவர் : மனோ ரெட் (29-Jun-14, 8:24 am)
பார்வை : 424

மேலே