புதியதோர் புத்தகம்

தென்றல் திறந்து வைத்தது
மலர் தோட்டத்தை
திங்கள் திறந்து வைத்தது
நீலவான் அரங்கினை
புன்னகையும் உன் இருவிழிகளும்
திறந்து வைத்தது என்னுள்ளே
புதியதோர் கவிதைப் புத்தகத்தை !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jun-14, 9:38 am)
பார்வை : 712

மேலே