நாண்
மெல்லிய குரலினால் என்
மனதிற்குள் குடிகொண்டவனே..!
உனது கைகளைப் பிடித்துக்கொண்டு
காற்றில் பறக்கவேண்டும் என்று
என் நெஞ்சம் துடிக்கின்றது ...
உனது கன்னம் எனும் பொற்கலயத்தில்
முத்தம் எனும் தேனை வார்க்க
என் உதடுகள் துடிக்கின்றது ...
உனது அகன்ற மார்பினில் சாய்ந்து
எனது கவலைகளை மறந்துவிட
என் நினைவு துடிக்கின்றது ...
ஆனால், பெண்ணாகிய நானோ
நாணம் எனும் நாணினால்
கட்டப் பட்டு தவிக்கின்றேன் ....!!!!!