ஆசையின் பாதையில்
ஆசையின் பாதையில் ....
ஆசையின் பாதையில்
அன்றாடம் செல்ல நான்
ஆசைப் பட்டேன் !!
உண்மையின் பாதை -எனை
உலகிற்கு வெளியே
செல்வதை உணர்த்தியது .!!
இன்பத்தின் பாதை -என்னுள்
இன்னல் பல தருவதாய்
இடித்துரைத்தது எனை .!!
நல்லதொரு பாதை தேடி
நானும் அலைகயில்
என் ஆசானின் பாதை ...
வா வென அழைத்தது .!!
ஆசானைப் பின் தொடர்ந்தேன் ..!!
அன்பு நெறி வழி நடந்தேன் !!!