புயல் வீணைகள்

வயிறுகளின் பள்ளங்களிலேயே
முனகிச் செத்துவிடாது
பசி

புகைந்து
புகைந்து
அது ஒருநாள்
புரட்சியை ஊதும்
**
ஏழை என்றாலே
இருமித்தான் சாகவேண்டுமா..
ஏன்
உருமிச் சாகக்கூடாதா..?

**
ஒரு தீப்பிடித்த இரவில்
இந்த வறண்ட விழிகள்
புயல்களை மீட்டும்
வீணைகளாகும்

அன்று
பூகம்பங்கள் நிகழும்...! (1992)

(ஒரு வித்தகனும் ஆயிரம் வீணைகளும் நூலிலிருந்து)

எழுதியவர் : கவித்தாசபாபதி (1-Jul-14, 11:38 am)
Tanglish : puyal veenaigal
பார்வை : 75

மேலே