நான் கோழை தான்

# நாட்டில் நடக்கும் அத்தனை தவறுகளையும் கண்ணால் பார்த்த பிறகும், அனுபவித்த பிறகும் என் நாட்டிற்காக எந்த ஒரு நன்மையையும் செய்ய முயற்சி கூட, எடுக்க முடியாத நான் கோழை தான்!

# பல ஆயிரம் கோடிகள் கொள்ளையடித்தவர்களை வெளியில் நடமாட விட்டுவிட்டு, பசிக்காக, பத்து ரூபாய் பன் பறிக்கும் திருடனை சிறையில் தள்ளும் இந்த சர்வாதிகார ஆட்சியை கண்டு எதுவும் செய்ய முடியாத நான் கோழை தான்!.

# ஒரு குடும்பதில்லோ அல்லது நண்பர்களுக்குள் சண்டை ஏற்ப்பட்டால் கூட பல ஆண்டுகள், ஏன், பல தலைமுறைகள் கூட பேசாமல் இருப்பார்கள். ஆனால் எதிரி நாட்டினர் நம் நாட்டுடன் பல முறை சண்டை இட்டு, பல வீரர்களை கொட்று குவித்தும், நம் நாட்டுக்குள் நுழைந்து நம் நாடு மக்களையே சரம் வாரியாக சுட்டு கொன்று குவித்தும், இது நடந்து வெறும் 5 ஆண்டுகளுக்குள், மீண்டும் நம் நாட்டிற்குள் பணம் சம்பாதிப்பதற்காக கிரிக்கெட் விளையாட உள்ளே வருகிறார்கள். இது தெரிந்தும் அவர்கள் ஏன் வருகிறார்கள் என்று திட்டி விட்டு, பின் எப்பொழுது கிரிக்கெட் விளையாட்டு ஆரம்பிக்கும் என்று எதிர்பார்த்து கிடக்கும், விளையாட்டை பார்க்க போகும் நான் கோழை தான்!.

# "இந்த நாட்டில் இவ்வளவு தவறுகள் நடக்கிறது. மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளை நடு ரோட்டில் நிற்க வைத்து கேள்வி கேட்க வேண்டும்" என்று என் நண்பர்கிளிடம் என் வீராப்பை பேச்சில் மட்டும் காட்டும் நான் கோழை தான்!.


# இந்த நாட்டில் திருத்த வேண்டியதும், திருந்த வேண்டியதும் ஒரு புறம் இருக்க, இவை அனைத்தும் தெரிந்தும் யாரோ, 2 பெரிய நடிகர்களின் திரைப்படத்தை காண்பதற்காக நீண்ட வரிசையில் நின்றும், பிடிக்காத நடிகரின் ரசிகர்களுடன் தேவை இல்லாமல் வாக்கு வாதம் செய்து கொண்டு இருக்கும் நான் கோழை தான்!.


# என் காதலை காப்பாற்ற போராடிய அளவு கூட, என் நாட்டை காப்பாற்ற போராடாமல் இருக்கும் நான் கோழை தான்!

# நம் நாட்டு அரசியல்வாதிகளிடம், நாம் ஏமாறவில்லை. ஏமார்ந்த மாதிரி நடித்தால்தான், நானும், என் குடும்பமும் வாழ முடியும் என்பதற்காக, அனைத்து அக்கிரமங்களையும், கண்டும் காணாமலும், தெரிந்தும் தெரியாமலும், பயந்தும், வளைந்து கொடுத்து, உள்ளுக்குள்ளே வருத்தப்பட்டு, வெளியில் கேட்க தைரியம் இல்லாமல், "ஊரோடு ஒத்து வாழ வேண்டும்" என்ற பழமொழியை இந்த சந்தர்பத்தில் உபயோகிக்கும், முட்டாளாகவும், நடைபினமாகவும், சுயநலவாதியாகவும், இந்த இந்திய நாட்டில் மானம் கெட்டு
வாழும் நான் கோழை தான்!

இதில் "நான்" என்பது என்னை மட்டும் குறிப்பது அல்ல. "என்னையும்" சேர்த்து!

எழுதியவர் : சாய்நாத் (1-Jul-14, 12:38 pm)
Tanglish : naan kozhai thaan
பார்வை : 285

மேலே