வலிகளுடன் உயிர் பிரியும் நிமிடங்களில்

கரையில்லாத தீவு ஒன்றில்
கரைந்து கொண்டிருக்கிறேன்
கனவல்ல......

சிறைப்பட்டு விட்டேன்
சிதைந்து தேடுகிறேன்
சிறையல்ல....

தொண்டை வறண்டு
துவண்டதில் வலிக்கிறது
நோயல்ல.....

உயிர்பிச்சை ஓலங்கள்
ரத்த வாசம் துளைக்கிறது
பேரிடர்கொல்ல.....

நகர முடியாது
திரும்ப முடியாது
மூச்சு முட்டுகிறது
பேச்சு வெட்டுகிறது

நிழல் வெளிச்சக்கீற்றில்
நினைவிழக்கையில்
ஓங்கியது
ஒரேயொரு எண்ணம்

பிழைப்புக்காய் வந்தவனை
பிழைக்க வைப்பாரோ?
பிழை செய்யும் இவர்தாம்
பிழைப்பாரோ?

காற்று வாடுகிறது
கேட்பாரற்று
கண்கள் மூடுகிறது

தனிமனித ரணங்களை
கேட்பதேயில்லை
இப்பணம் கூட்டும்
இழவூழ்
நடைபிணங்கள்

*
*
*
*
*
=============================================
வலிகளுடன் பிரிந்த உயிரின் கடைசி நிமிடங்கள்
=============================================

எழுதியவர் : சர்நா (2-Jul-14, 6:53 pm)
பார்வை : 140

மேலே