வாழ்வு மறந்த கூட்டம்
கத்தரி வெயிலிலே
கால்கள் கடுகடுகக்
கிரிகெட் விளையாடிய நம்
பசங்க
பனைமர காட்டினிலே
பனம் காய் தேடி
பசிமறந்த கூட்டம்
இன்று
வெளிநாடுஎன்று சொல்லி
கிளம்பிட்டு இங்கு வந்து
கம்பமதில் பழம்
என்று எள்ளி நகைகுது
பப்புகள் பல சென்று
பல குடி குடித்ததுபோல்
பாவ்லா செய்யும் மக்கா
ஒரு குடி என்றாலும்
பனை மர கள்ளின் சுவைக்கு
எந்த சுவை வருமடா
சுட்டேரிக்கும் வெயிலிலும்
சொக்க வைக்கும் குளிரிலும்
நீ பட்ட கஷ்டம் உன்னோடு
அதை மறைத்து நீ செய்யும்
அரும்புகளோ ஏராளம்
நீ திருந்தி வாழு
உண்மையாக வாழ பழகு
வாழ்வில் திருப்பம் அடையும்