துணை எது
கெட்டொழிந்து திருந்தியவர்
நல்லதைச் சொல்ல
அனுபவம் கை கொடுக்கும்.
நல்லவர் அதைச் சொல்ல
ஆன்றோர் வாக்கு துணையாகும்.
பாடப் புத்தகங்களை மட்டும்
புரிதல் இன்றி இயந்திரமாய் மாறி
மதிப்பெண் குவிப்பதுவா
உங்களது சாதனை?
நல்ல நூல்கள் எதையும்
பார்க்காமல் படிக்காமல்
வளரும் குழந்தைகளே
உங்களுக்கு எது
துணையாக இருக்கும்?
நேரத்தைக் வீணடிக்கும்
கணினி விளையாட்டா
அடுத்தவர் நேரத்தையும் கொல்லும்
செல்பேசி வெட்டிப் பேச்சா?
சிந்திக்காமல் எதையும்
சிந்தையில் திணிக்காதீர்!
பயனுற வாழ
நல்ல நூலகளைக் கற்பதுவே
அறிவுடமை.