தரைமட்டமானது

அறிவியல் சொல்லும்
இன்றைய மேதை
அழகாக கட்டினான்
பல அடுக்கு வீட்டை
அது தரமற்றதானது
பலர்வாழ்க்கை
தரைமட்டமானது..........!
பிணக்குவியல்
கணக்கெடுப்பு
நோய் தடுக்க
மருத்துவ நீர் தெளிப்பு. .......!
குளம் இருந்த
இடத்தில்
வீடு கட்ட போனாய்
குடம் குடமாய்
கொட்டும் குருதியில்
எதை கட்ட போகிறாய்........?
அய்யா சாமி
இன்று
அய்யோ...... சாமி
அறிவியல் போதும்
இயற்கையை அழித்தது
போதும்.........
இருபவனை வாழவிடு
எங்கேயாவது ஓடிவிடு
என்று சொல்ல துப்பில்லாத மக்கள்
இருப்பதில் பயன் என்ன
எப்படியோ போகட்டும்
காட்டுக்கு போயாவது கவி
நீ வாழ்ந்துவிடு