அன்புள்ள அம்மாக்கு, குட்டி பெண்ணின் கடிதம்
என்னவனின் தாயை,
என் தாயாக நினைக்க
இந்த வயது போததம்மா.. !
வீடு கணக்கெல்லாம், சரிவர பாக்க
இன்னும் எனக்கு தெரியாதம்மா.. !
புளிக்கொழம்பில், புளி போட
இன்னும் தான் மறக்குதம்மா.. !
சாம்பார் கூட இப்பவும், ரசமாய்
தான் மாறுதம்மா..!
நான் சுட்ட இட்லி, தராசு கல்லாய்.,
மாறுதம்மா.. !
ஊசிக்கு பயந்து, இன்னும் தான்
ஒடுறேன்மா.. !
பொம்மை கூட வெளையாட, இன்னும்
தான் பிடிக்குதம்மா.. !!
உன்னை விட்டு தூரம் போகும், மனசு
இன்னும் வரலம்மா.. !!
அப்பாவி பையன், நிம்மதியை
அநியாயமா கெடுக்காதம்மா.. !
அதனால தான் சொல்றேன்.,
கல்யாணம் , கல்யாணம்னு கழுதையா
கத்த்த்த்த்த்த்த்தாதே...அம்மா ...!
- செல்ல பெண். .