உண்மை காதல்

தென்றலை கேட்டேன் ஒரு கவிதை
சொல் என்று

என் காதலிக்கு நான் சொல்லிடவே,
கவிதையிலே எந்தன் காதலையே

அந்த பூக்களை தான் கேட்டேன்
கொஞ்சம் மணத்தை, நான்
சென்று அவளுக்கு சொல்லிடவே
பூ மணத்துடன் எந்தன் அன்பினையே

வான வில்லை கேட்டேன் கொஞ்சம்
வர்ணங்கள் தந்து விடு எனக்கே என்று
எந்தன் காதலுக்கு நிறம் சேர்த்து நான்
கொடுத்திடவே அவளுக்கு

மழைச்சாரலை கேட்டேன் இனிய
தூரலை கொண்டு என் வார்த்தைகளை
ஈரப்படுத்திடு என்றே, அந்த ஈரம்
அவளை ஈர்க்கும் என்றே

மின்னலை கேட்டேன் கொஞ்சம் ஒளி
தந்து எந்தன் காதலை பிரகாசிக்க செய்யும்படி
அந்த மின்னொளி தரும் ஒளி எந்தன்
காதலுக்கு என்றே

தேனீக்களை கேட்டேன், ஒரு துளி தேன்
தந்து எந்தன் காதல் சொற்களை இனிக்க
செய்யும் படி, அந்த இனிமை அவளை
கவரும் என்றே

எந்தன் கண்களை கேட்டேன் இரண்டொரு
சொட்டு கண்ணீரை நிரப்பிடு எந்தன்
காதலிலே என்றே, அந்த கண்ணீர்
அவளை கரைக்கும் என்ற நம்பிக்கையிலே

இத்தனை தான் நான் செய்தும் அவள்
மனம் கரைய வில்லையே,
காதலுக்கு வேண்டியது இதுவல்ல,
உண்மை உள்ளம் என்று சொல்லி விட்டாளே

மாறுபட்ட வகையில், உன்னதமான
காதலை, உண்மையான அன்புடன் அவள்
முன்னே வைத்தேன், அவள் ஓடி வந்து
எந்தன் மார்பில் முகம் புதைத்தாளே

உண்மை காதல் இருந்தால் மனதில்,
ஏதொரு பூசலும் அதற்க்கு தேவையில்லையே
பூஜிக்க இரு உள்ளங்கள் அந்த காதலை முழு
மனதுடனே....!

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (5-Jul-14, 4:23 am)
சேர்த்தது : nimminimmi
Tanglish : unmai kaadhal
பார்வை : 108

மேலே