மிச்சம் இருந்துவிட்டுப் போகட்டுமே
மிச்சம் இருந்துவிட்டுப் போகட்டுமே
================================
விரலோடு என்
குறுகியவிழிகளும் மூடும்
விரைகின்ற என் கால்களும் நோகும்
இருந்தாலும் வருகின்றேன்
உன் மடியில் நான் கிடக்க
பேருந்து தரிப்பில்
கடைப்பேருந்து கடத்தலிற்கான
நெறிமிறைத் தப்பிதங்களால்
பொதிகளை சுமந்த லிகிதங்களின்
காத்திருத்தல்களுக்கான
கால அவகாசங்கள்
காலாவதி ஆகிக்கொண்டே இருக்கிறது
தெருமரலற்றுத் திரைக்கும்
தைவரும் ஆதுரந்தனை
மெய்ப்பிக்குந் திறக்கொன்றை
பரத்தல் எனச்சொல்லி
திறவற்ற உட்குடைவினுள்ளே
பகழி எய்துச் சென்றவர் யாரோ,,,!!!
குறுந்திரக்கு பாரித்தலினால்
கிலேசங்கள் நிறைய
குழைகொண்ட மனதில்
மறவின் விதியைத்
துளைக்காமற்சென்றவர் யாரோ,,,!!!
தோற்றுக்கொடுக்கும்
நொடிகளுக்காக
மிச்சம் இருந்துவிட்டுப் போகட்டுமே
சில கவிதைகள்
என் இதழ்களால் எழுதிவிட
விரலோடு என்
குறுகியவிழிகளும் மூடும்
விரைகின்ற என் கால்களும் நோகும்
இருந்தாலும் வருகின்றேன்
உன் மடியில் நான் கிடக்க
அனுசரன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
