ஓட்டை கூரை நிலவொளியில்

ஓட்டை கூரை நிலவொளியில்
கிழிந்த போர்வை திரையினிலே
பழந்துணி திணித்த தலையணையில்
மூட்டை பூச்சிகளின் முத்தத்திலே
கொசுக்களின் இனிய கீதத்திலே
கொசுவர்த்தி வாசனை கமகமக்க
சிதைந்த பாயிலே சிங்காரமாய்
சிறிதளவே தூங்கினாலும் போதுமே என்
மறுநாள் பிழைப்புக்கு போய்வர.....
ஏழையின் தூக்கம்...