ரோஜாவே நீ உனக்காகச் சிரிக்கிறாய்

கல்லறையில் வைத்தாலும் சிரிக்கிறாய்
கண்ணீர் விடுவதில்லை நீ !
கல்யாண மாலையிலும் சிரிக்கிறாய்
கடவுளின் கரங்களிலும் சிரிக்கிறாய்
முள் சூழ்ந்திருந்த போதிலும்
முகம் சுளிப்பதில்லை நீ !
மலர்ந்து சிரிக்கிறாய் !
உன் போன்ற மலர்கள் உலகில் இல்லை !
ரோஜாவே ! நீ உனக்காகச் சிரிக்கிறாய் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-14, 10:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 2569

மேலே