நாளை மாறும்

நேற்றைய கண்ணீர்
இன்றைய புன்னகையாக
காலக்காற்று
கை மாற்றம் செய்யும்
வாழ்க்கைச்சக்கரத்தை!

இதயத்தில் தினம்
இடி மின்னல்
இறங்கிக்கொண்டே
இருக்கலாம்!

தொட்டவையெல்லாம்
சுட்டு எரியக்கூடும்
தொடாமலும்தான்!

வறண்ட பூமியும்
இருண்ட வானமும்மாக
வாழ்க்கைப்பயணம்
ஓடக்கூடும்!

மாரிகால மேகமும்
மனிதன் விழியும்
இரட்டைப்பிறவிகள்
மழை பெய்வதில்!

ஆனாலும்
அவலங்கள் ஏற்பேன் என்று
கர்வம் கொள்...
நேற்றைய அவலம்
நாளை மாறும்!

ஏய் மனிதா!
சலிக்காமல்
உழைத்துக்கொண்டே இரு
நாளை
காலக்காற்று
கை மாறும்.

எழுதியவர் : மிஹிந்தலைஏ.பாரிஸ் (6-Jul-14, 10:55 am)
Tanglish : naalai maarum
பார்வை : 168

மேலே