மீண்டும் வானம்பாடி - ✿ கவிதை போட்டி ✿ சந்தோஷ்
![](https://eluthu.com/images/loading.gif)
கவியெழுது தோழா ! புதுக்கவிதை எழுது !
புதுநடையில் புரட்சிப்படைத்திட கவிதை எழுது
அக்னிக்கோலில் அநியாயங்களை தட்டிக்கேட்க
கவியெழுது தோழா.! நீ கவியெழுது..!
சினங்கொண்டு நீ எழுதினால் - காமூகர்கள்
பயங்கொண்டு மூத்திரம் பெய்திட வேண்டும்
வெறிமையில் நீ எழுதினால் - அட்டூழியங்கள்
பதறிக்கொண்டு ஓடி மறைந்திட வேண்டும்.
மீண்டும் வானம்பாடி சங்கம் அமைத்திடுவோம்
மீண்டும் புரட்சிப்பாடி புதுவீரம் எழுதிடுவோம்
ஒரு புரட்சிக்கொடியில் மறுமலர்ச்சி படைத்திடுவோம்
புதிய வானம்பாடியாய் இவ்வுலகை காத்திடுவோம்..!
இன்னுமென்ன தயக்கம் தோழா உனக்கு
அந்தவானமும் தூரமில்லை தோழா நமக்கு
வாடா...தோழா ! புறப்பட்டு வாடா !
புதுக்கவிதையில் புரட்சியெழுத எழுந்து வாடா...!
-இரா.சந்தோஷ் குமார்.