கழிப்பிடங்கள்
சொர்க்கம் நரகம் பற்றி
சொல்லாத மதம் இல்லை.
எங்கிருக்கும் அவையென்று
எவருக்கும் தெரியாது.
கைலாசம்* சென்று வநத
நண்பரையும் கேட்டேன்நான்
அவருக்கும் அதுபற்றி
எதுவும் தெரியாதாம்.
பூலோக நரகத்தைப்
பார்க்காத பயணியில்லை.
பேருந்து நிலையக்
கழிப்பிடமே@ பூலோகநரகமாம்.
சந்தேகம் உமக்கிருந்தால்
ஒருமுறை பயன்படுத்தி
உண்மையா பொய்யா என்று
உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
*2005, ஜூலை மாதம் கைலாசத்திற்கு புனித யாத்திரை சென்று வந்த என் நண்பர்
@பெரும்பாலான பேருந்து நிலையக் கழிப்பிடங்கள்