மீண்டும் வானம்பாடி
நிலவும் மலரும் மனதில் தினம்
இரசித்துக் களித்து கனவு வானில்
கவிதை பாடிய வானம்பாடி நாங்கள்!
கவலை அறியாத எங்கள் வாழ்வில்
எப்படி வந்ததோ பாழாய்ப்போன பருவம்!
பார்க்கும் யாவும் பயமுறுத்த உரசிப்
பார்க்கிறது நரை விழுந்த தலைகூட!
படிக்கச் சென்றாலோ படுக்கை கேட்கிறான்
பயணத்தில்கூட பாதுகாப்பு இல்லை எங்களுக்கு
பசியாரக் காத்திருக்கிறது பருந்துக் கூட்டம்
பக்கத்து வீட்டு அண்ணன்கள் எங்களை
ஆடை இன்றி அணைக்க நினைத்தால்...
இரக்கமில்லாத இறைவன் படைத்த இவுலகில்
ஊர்வலமாய் செல்வேன் நால்வர் சுமக்க
நான் மீண்டும் வானம்(வெடி) பாடி!