மருந்து மருந்து

இரண்டு ரூபாய்
மாத்திரே
இரண்டு ரூபாய்
மாத்திரே

நோய் வந்தவன்
வாங்குவானு
10 ருபாய்னு
ஏன் மாத்திரே
நீ ஏமாத்திரே. ......

முத்திரைய அழிச்சிபுட்டு
புதுசா நீ குத்துற
தினுசா நீ குத்துற

வியாதி போக தேடி
வந்தா
வைத்துல நீ குத்துற
நம்பிக்க வைத்ததுல நீ குத்துற

அத தின்னுபுட்டு எரியுதுடா
ஏழை உடம்பில் சித்திரை
இனி ஏது உடம்பு சித்திரை

கால்வலிக்கு தின்னாக்கா
எகுறுதடா சக்கரை
எறும்பு ஊற சக்கரை

இத எல்லாம் செஞ்சாலும்
வருதா உனக்கு
நித்திர
வருதா உனக்கு நித்திர

தப்பு தப்பு செஞ்சாலும்
எருமை போல நிக்குற
எதுஎதுவோ விக்குற

எழுதியவர் : கவியரசன் (7-Jul-14, 9:08 am)
Tanglish : marunthu marunthu
பார்வை : 95

மேலே