புதியன பிறக்கட்டுமே

பதுமைகள் வேண்டாம்
புதுமைகள் தேடு
கொடுமைகள் போதும்
விடுதலை தேடு

பழையன பழையன
கழியட்டுமே
புதியன புதியன
பிறக்கட்டுமே

உள்ளம் தொடு
உண்மை எடு
உயிரை கூட
விலையாய் கொடு

தடுத்திடும் மேகம்
விலக்கிடுவோம்
பெளர்ணமியை இங்கு
கொடுத்திடுவோம்

கனவுகள் காண்போம்
கடமைகள் தீர்ப்போம்
உடைமைகள் காப்போம்
புது விதிதனை ஏற்போம்..............!

கைகளை கொடு
பொய்களை விடு
பேய்களை ஓட்ட
புது லட்சியம் எடு.............!

பழையன பழையன
கழியட்டுமே
புதியன புதியன
பிறக்கட்டுமே..........!

எழுதியவர் : கவியரசன் (7-Jul-14, 9:16 am)
பார்வை : 95

மேலே