மீண்டும் வானம்பாடி

செல்லச் சிட்டுத்தான் முல்லை மொட்டுத்தான்
செல்லும் வழியெங்கும் எழும் தொல்லைதான்
பாவாடை தாவணியை ஏற்கும் வயதில்லைதான்
பாழான ஊரில் பூவெல்லாம் பாவம்தான்
பள்ளிக்குச் சென்றாலும் சேதம் உண்டுதான்
பாசமான தாய்க்கோ நெஞ்செல்லாம் பாரம்தான்
வயதோ பதினொன்றுதான் மனதோ சிறுபிள்ளைதான்
வானம்பாடி கூட்டத்தின் கானம்பாடும் குயில்தான்
ராகம்பாடும் பொழுதோ கானல் நீர்தான்
அண்ணல் வழிநடக்க அன்பில் நட்டம்தான்
கண்ணில் விழுவதோ காமுகர் கூட்டம்தான்
புண்ணுக்கு மருந்தாக வாராதோ மாற்றம்தான்
மண்ணுக்குள் போனாலும் மறையாதோ கூற்றும்தான்
ஓயாதோ அலைபோல் மனதில் ஏக்கம்தான்
ஓய்ந்திடுமோ நம்பிள்ளைக்கு இன்னலின் தோற்றம்தான்
ஒலிக்கட்டும் மீண்டும் வானம்பாடி கானம்தான் ?