தின்று முடித்த தீ

தீயில் கருகியது
தீபங்கள்
திரியில்லாமல்............!!
உங்களை போலவே
என்னையும்
தின்று முடித்தது தீ
எந்த தவறும் செய்யாமல்
எண்ணையோடு சேர்த்து
உங்களை சுமந்ததற்க்காக.....
ஓடிக்கொண்டிருந்த
நான் சக்கரங்கள் இருந்தும்
முடமாகிப்போனேன்
நகரக்கூட முடியாமல்......!!!
நாற்பதடி சாலையிலும்
மிதந்த எண்ணெய்
வேகமாக ஓடிவந்து
என்னை அணைத்துக்கொண்டதால்
அணைப்பதற்கு வழியில்லாமல்
வெந்துதுடிக்கிறேன்
வலியில் கதறியபடி.....
வேடிக்கைபார்க்கிறது வானமும்
வழியில்லா
மனிதரைப்போலவே.............!!!
கவிதாயினி நிலாபாரதி