வணக்கத்துகுரியக் காதலியே
உன் பெயரை மட்டுமே செவிமடுக்க வேண்டுமெண
ஏங்குதடி என் காதுகள்!
நீ சுவாசித்தக் காற்றை மட்டுமே சுவாசிக்க வேண்டுமெண
என் இதயம் வேலை நிறுத்தம் செய்யுதடி!
இரவெல்லாம் பகலாய் மாறிப்போன
விந்தையை எப்படிச் செய்தாயடி!
உன் கைவிரல் கோர்த்து என்றும் நடந்திட வேண்டுமெண
துடிக்கிறதடி என் கைகள்!
நீ நடந்து சென்ற வழித் தடங்களை மட்டுமே
பின் தொடர நினைக்குதடி என் கால்கள்!
உன்னுடன் பேசி சிரித்த நொடிகள் மட்டுமே
நினைவுகளாய் உள்ளதடி என் மனதில்!
இப்படி இனிய அவஸ்தைகள் பல தந்தவளே!
என் இனியவளே!என் வணக்கத்துகுரியக் காதலியே !