நம் ஊரை போல வருமா

கண்மாய்க் கரையும்
களத்து மேடும்
மாடுகள் மேய்ந்திடும்
மந்தை வெளிகளும்
மனதின் மயக்கிடும்
மாஞ்சோலைகளும்
புன்னைவன மரக்காடுகளும்
பொழுது சாய்ந்திடும் வேளைகளும்
தூங்கி கிடக்கும்
தொட்டா சிணுங்கி வரப்புகளும்
கள்ளிச்செடிகள்
கைக்கோர்த்து நிற்கும்
ஒத்தையடிப்பாதைகளும்
சொல்லிக்கொடுக்காத காதலை
முகம் அறியாத
முகப்புத்தகமும்
வேளையில் கவனமாய் இருக்கும்
வெளிநாடுகளும் கற்பிக்குமா?

எழுதியவர் : (9-Jul-14, 4:04 pm)
பார்வை : 58

மேலே