ஆடையும் பெண்மையும்
இடை தெரிகிறது
இருந்தாலும் என்
உடை தவறில்லை
நடை பாதையில்
நான் நடை போகையில்
கடை பார்வையில்
என் உடை பார்க்கையில் காமம்
உடைப் பவன்
தவறு.............!
விவாதம் செய்வது
மகளிர் சங்கம்
விட்டு கொடுத்தால்
அது அவர்களுக்கு பங்கம்.......!
திரை போடு
மறைவிடத்திற்கு நீ
திரை போடு
ஆக்கத்தில் உரிமை கொள்
ஆடைகளில் எல்லாம்
ஈடு கொடுக்காதே
ஆணுக்கொரு சட்டம்
பெண்ணிற்கு ஒரு சட்டமா
அடிமைத்தனம் செய்கிறீர்
அடிப்படைகள் சரி செய்கிறோம்
அடிமைத்தனம் செய்யவில்லை. .........
பண்பாடு காப்பதும் உன்
கடனே
பெண் தன்னோடு காண்பதை
வெளிகாட்டாது இருப்பின்
மிக நலனே.............
ஆண் இழக்க ஏதுமில்லை
பெண் காக்க ஆயிரம் உண்டு
என சமூகமது நினைக்கிறது
கண்ணாக பாவிக்க
காளைகள் இல்லாத போது
பெண்னே நீ போதித்தும்
பயனில்லை
வாதித்தும் பயனில்லை
போட்டியிட்டு இருத்தலைவிட
போர்த்தியபடி இருந்துவிடு
மதி கெட்ட மூடர்கள்
சதை பார்க்க காத்திருக்க
மதி போன்ற பெண்மையினை
மிகைபட காட்டாதே
புகைபட கண்கொண்டு
பெண்மை சிதைபட பார்ப்பவர்கள் இருக்க
திரையிட மறுக்காதே
இப்படி சொல்வதும் நன்மைக்கே அதை புரியாது
வெறுக்காதே