நான் காதல் சொல்ல போகிறேன்

புன்னகையில் என்னை மயக்கியவளே
உன் கூந்தலில் நான் பூவைக்க விரும்புகிறேன் """

மை வைத்த விழியில் என்னை மடக்கியவளே """"
உன் மவுனத்தில் என் குரல் கோர்க்க நினைக்கிறேன் """

வண்ண வண்ண உடை போட்டு என் மனதை உடைத்தவளே
உன் வண்ண முகம் நான் தினம் பார்க்க துடிக்கிறேன் """

சின்ன சின்ன பிள்ளைகளிடம் நீ கொஞ்சி கொஞ்சி விளையாட
நான் அதில் கொஞ்சம் கொஞ்சமாக என்னை இழக்கிறேன் உன் அழகில் சரிகிறேன் """""

இனி நான் காத்திருந்து என் காலம் கடத்த விரும்ப வில்லை
என் காதலை சொல்ல போகிறேன் ,,,,,

உன்னிடமல்ல உனக்கு உயிர் கொடுத்தவர்களிடம்.

எழுதியவர் : ரவி.சு (9-Jul-14, 10:04 pm)
பார்வை : 160

மேலே