வீரனை விதைத்து வை - இராஜ்குமார்
==================================
தன்னம்பிக்கை கவிதை - 5
==================================
அவலத்தை மட்டும்
அடுக்கி வைத்து
அசையாமல் நின்றால்
ஆசை இங்கே
வெற்றி பெறுமா ..?
சருகுடன் சண்டையிட்டு
துணிவின்றி தோற்று போனால்
வெற்றியின் வேட்கை எதற்கு ?
ஏமாற்றும் நிமிடத்தை
எடுத்து எறிந்து
எரிமலை எண்ணங்களுடன்
எழுந்து வா ..!!
உன்
கன்னம் தொடும்
கண்ணீர் - இனி
காணாமல் போகட்டும் ..!
இன்னலை இப்போதே
உரசி பார்..!!
உன்
உள்ளங்கையில் உடனே
உடைந்து போகும் ..!!
துணிச்சலை
தோலில் கோர்த்து
துயரத்தை துரத்தி பார் ..!!
உன்
துரத்தலில் தோல்விகள்
தொலைந்துப் போகட்டும்..!!
கொட்டிக் கிடக்கும் வாய்ப்பினை
எட்டி கொஞ்சம்
எடுத்துப் பார் ..!
உன்
நெற்றிப் பொட்டில்
வெற்றியே நிற்கும்..!!
வெறுமையை வெட்டி வீசி
விரைந்து வா வெளியே ..!
உன்
விரல் நுனியில்
விருதுகள் நிற்கும் ..!!
நரம்புகளில் நகர்ந்து
குருதியை குடைந்து
இதயத்தில் இறங்கி
இலட்சியத்தை பதிவு செய் ..!!
இது காயத்தின்
கடைசிப் பக்கம் ..!
உன்
சோம்பலை வென்று
கோழையை கொன்று
வீரனை விதைத்து வை ..!!
---இராஜ்குமார்
-- தன்னம்பிக்கை கவிதைகள் தொடரும் ,,,,