பார்க்க மறந்த வேளையில்

விதியென செத்தாலும்
பரவாயில்லை
விலகி நின்று கொல்லாதடி...!
என்றாவது எனைப்பார்க்க
வருவாய் முகம் தருவாய்
என ஏங்கியதுண்டு.....
ஏக்கத்தில் நினைவுகள் நீந்தியதுண்டு..
என் வாசலில் வசந்தத்திற்க்கு
இடமில்லை..
என் தெருவினில் தங்கிட தென்றலுக்கும் மனமில்லை....!
ஏன் என்று தெரியாதா
உண்மையும். வழக்கு தொடராதா...
ஈரக்கூந்தல்
உதிர்க்கும் பூக்களை
மொய்க்கும் ஈக்களாய் நானாக
பாதி நிமிடங்கள் கடந்த வேளையில்
சேலை அணிந்து நடந்து போகயில்
தேனாக என் உயிர் தானாக
பிரியாதா
விழிகள் அதை அறியாதா
நாட்காட்டியும் அழுது அழுது
கிழிகிறதே.....!
எண்ணி மனம் கரைகிறதே..!
இருந்தும் இருக்கிறேன் தடுமாறாமல்.
இயல்பாய் நடிக்கிறாய் மனம்
கோணாமல்..!
வாழ்த்துக்கள் என வாழ்த்துகிறேன்
உன்னை
வார்த்தைகள் கூட பிரியாமல்
கைகோர்க்கும் நான் தொடுக்கும் வரிகளுக்கு.
பார்வைகள் கூட பதியாமல் விடை கேட்கும் நீயே இதற்க்கு பதில் விளக்கு....!