விடியல்
எழுந்திரி தம்பி!
விடியபோகிறது!
முகத்தோடு
சோம்பலையும்
கழுவு!
உறக்கம்
ஒருசில ஆண்டுகளுக்கு
ஒத்திவை!
மாறுதலுக்காக
விடியலை பார்த்து
தாமதம் என்னவென்று
விசாரி !
துணிந்து விடு !
ஓயாது உழைக்க !
நீர் விழமறுத்தால்
அருவி என்ற
பெருமை கிடையாது !
சீனப் பெருஞ்சுவரும்
ஒவ்வொரு கல்லாய்
கட்டியதுதான் !
ஒரு அடியை
அளந்துதானே
உலகை அளந்தோம் !
நடந்து பழகித்தானே
நிலவுக்கு போனோம் !
முயற்சியோடு பயிற்சிதானே
வெற்றிக்கு வழி !
பட்டம் பெற்றுவிட்டதால்
சட்டம் பேசாதே !
எல்லோருக்கும் வேலை
இறைவனும் தரமாட்டான் !
வறுமை ஒழிக்க
உழைப்பு ஒன்றே ஆயுதம்!
வெயிலில் குளி!
வியர்வையினால்
உடலை கழுவு !
சோம்பல் தான்
கண்ணீருக்கு காரணம் !
விதைகள்
உன் வியர்வைபட்டு
முளைக்கட்டும் !
அப்போது
ஒன்பது கோள்களில் ஒன்று
உனக்கே சொந்தமாகலாம் !
* * *