தாயின்மடி

கருவரையின் இருட்டில் இருந்தேன்,இவ்வுலகுக்கு வா என்று அழைத்தாய்.
என் பக்கம் தாய் இல்லா தருணங்களில்,பசி இன்றியும் அழுது நடித்தேன்,
புரிந்தாலும் தாய் போல் பாசத்தை ஊடினாய்.
என்னை அழ வைக்கும் தீயும் நீ,என்னை யாரேனும் அழ வைத்தால்,என் தாயாய் மாறுவதும் நீ.
உன் குரல் கேட்டு சிரித்து மகிழ்ந்தேன்,உன்னிடம் தானே எல்லாம் பகிர்ந்தேன்.காலம் நம்மை பிரித்ததாம்,கர்வம் அடைகிறது.
மகிழ்ந்து கொள்ளட்டும் அந்த பேதை,நம்மை தானே புரிந்து கொள்ளட்டும் அந்த பேதை.இடம் மாறி போனாலும்,நம் வீட்டில் நாம் வாழ்ந்ததடம் மறைந்து போகாது.
என்றைக்கும் உன் வரவை காத்து இருப்பேன்,என் இன்னோரு தாயின் மடிக்கு ஏங்கி.

எழுதியவர் : ப்ரியா (11-Jul-14, 11:04 pm)
பார்வை : 92

மேலே